Friday, April 19, 2024

நீதிமன்றம் தேவையில்லை, சட்ட நூல் தேவையில்லை!!

Share post:

Date:

- Advertisement -

 

 

அயோத்தி பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில்உச்ச நீதி மன்ற தீர்ப்புநீ தியாக அமைய வில்லை..

அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று (18.11.2019) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் சம்சுல் லுஹா கண்டன உரை ஆற்றினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது நீதியாக அமைய வில்லை என்பதை உணர்த்தும் வகையில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் மாநில செயலாளர் இ.முகம்மது கூறுகையில்..

பாபர் மசூதி இருந்த நிலத்தில் ,இராமர் கோயில் கட்டுவதற்காக அனுமதி அளித்துள்ளதுடன்பாபர் மசூதி இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில்முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் தங்களுக்கு 5 ஏக்கர் நிலம் வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தை நாடவில்லை.

நீதியைக் கேட்டுத்தான் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள்..

உச்ச நீதி மன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு நீதிக்கு புறம்பானது என்பதை முன்னாள் நீதிபதிகளான கங்குலி, மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்களே சுட்டிக் காட்டி கண்டித்து உள்ளனர்.

இந்த தீர்ப்பு அநீதியானது நியாயமற்றது என்பதை நாட்டில் உள்ள அனைத்து சமுதாயத்தின் பெரும்பாலான மக்கள்தெரிவித்துள்ளனர்.

எனவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்து நீதியை வழங்க வேண்டும்!  தெரிவித்தார்

பெண்கள், குழந்தைகள் உட்பட5  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

காவல்துறை அனுமதி இன்றி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ,இத்தனை ஆயிரம்பேர் திரண்டிருந்தப் போதிலும்,

சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கோ, போக்குவரத்துக்கோ எத்தகைய பாதிப்பும் ஏற்படாத வகையில்மிகவும் கட்டுப்பாடுடடன், இராணுவ ஒழுங்குடன் நடந்து கொண்டதமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் தொண்டர்களைதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக

கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை கைவிட்டதுடன்,

தடைமீறிய கண்டன ஆர்ப்பாட்டம் ,அதுவும் உணர்ச்சிப்பூர்வமான
ஒரு ஆர்ப்பாட்டம்
அதில் பல ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தும்கூட,

மிக கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினரை ,

மூத்த பத்திரிகையாளர்கள்,
காவல்துறை – உளவுத்துறை அதிகாரிகள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...