Tuesday, April 23, 2024

நாளை முதல் கடுமையாக உயரப்போகும் பெட்ரோல் விலை… பகீர் பின்னணி !

Share post:

Date:

- Advertisement -

ஈரானிடம் இருந்து பெட்ரோல்/டீசல் வாங்குவதை இந்தியா இன்றோடு நிறுத்த போகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.

ஈரானிடம் உலக நாடுகள் யாரும் எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே இருந்த அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீது இந்த தடையை விதித்தது.

இதில் சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இன்றோடு அந்த அவகாசம் முடிகிறது.

இன்றோடு இந்தியா – ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவின் பொருளாதார தடையை இந்தியா சந்திக்க நேரிடும். இதனால் இந்தியா இன்றோடு அதிகாரப்பூர்வமாக ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்குவதை நிறுத்த போகிறது. இந்தியாவிற்கு அதிகமாக பெட்ரோல், டீசல் வழங்கும் நாடுகளில் ஈரான் மூன்றாம் இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இனிமேல் சவுதி, அமெரிக்கா, அமீரகத்திடம் இருந்து மட்டுமே எண்ணெய் வாங்க முடியும். ஆனால் இவர்கள் ஈரான் போல குறைவான விலையில் எண்ணெய் விற்பதில்லை. அதேபோல் சலுகைகளும் கிடையாது.

மேலும் இந்த தடை காரணமாக மற்ற நாடுகளும் இதே மூன்று நாடுகளிடம் இருந்து மட்டுமே பெட்ரோல் டீசல் வாங்க முடியும். இதனால் தேவை அதிகம் ஆகி, இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை.

இதனால் நாளையில் இருந்து பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும். ஈரானிடம் இந்தியா ஏற்கனவே வாங்கி இருக்கும் பெட்ரோல் டீசல் கையிருப்பு தீரும் வரை கொஞ்சம் சமாளிக்க முடியும். அதன்பின் பெட்ரோல் டீசல் விலை கிடு கிடுவென்று உயரும். முக்கியமாக தேர்தல் முடிந்த பின் ஒரே அடியாக பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட வாய்ப்பு இருக்கிறது.

இந்த முறிவு காரணமாக பெட்ரோல் டீசல் விலை மட்டும் உயர் போவதில்லை. பின் வரும் பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும்.

~அதிக விலை கொடுத்து பெட்ரோல் டீசல் வாங்குவதால் இந்தியாவில் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயரும்.

~பண வீக்கம் அதிகம் ஆகும்.

~பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டணங்கள் அதிகம் ஆகும்.

~இந்தியாவின் பண மதிப்பு பெரிய அளவில் அடி வாங்கும். இது மேலும் பொருட்களின் விலையை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...