அதிரை இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 25ம் ஆண்டு மற்றும் SSM குல் முகம்மது நினைவு 19ம் ஆண்டு எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 17/06/2019 நடைபெற்ற ஆட்டத்தில் TMMK ஸ்போர்ட்ஸ் கிளப் அதிரை அணியினரும் காளீஸ்வரா கால்பந்து கழகம் கழநிவாசல் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் TMMK ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிரை அணி 4-2 என்ற கோல் கணக்கில் காளீஸ்வரா கால்பந்து கழகம் கழநிவாசல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய(18/06/2019) தினம் விளையாட இருக்கின்ற அணிகள் :
தஞ்சை கால்பந்து கழகம் தஞ்சாவூர் – வேலங்குடி