மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று(26.10.2018) அன்று மாலை நகர தலைவர் அப்துல் பகத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள்,மல்லிப்பட்டிணத்தில் பரவி வரும் நோய்கள் குறித்தும்,டெங்கு விழிப்புணர்வு, நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
ஆலோசனையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான், கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் ஹவாஜா மற்றும SDPI நகர செயலாளர் ஜவாஹீர் , மற்றும் கிளை பொருளாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Your reaction