Thursday, March 28, 2024

அதிரை கல்லூரியில் மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் பணியில் லயன்ஸ் சங்கம்…!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மற்றும் அதிரை லயன்ஸ் சங்கம்,காதிர்முகைதீன் கல்லூரி இணைந்து நடத்தும் பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தின விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக அளவிலான அனைத்து கல்லூாரி பேச்சு போட்டி இன்று காதிர் முகைதின்
கல்லூாரி அரங்கில் 2:30 மணியளவில் தொடங்கியது. இந்நிகழ்ச்சி முதலில் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சி தொடங்கி வரவேற்புரையாக அதிரை லயன்ஸ் சங்க பேரா.எம்.ஏ. அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூாரியின் தாளாளர் எஸ்.ஜே.அபுல் ஹசன் அவர்கள் தலைமை உரை வழங்க, வாழ்த்துரையாக கல்லூாரியின் முதல்வர் பேரா. முகைதின் அவர்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களை வரவேற்றார். அதை தொடர்ந்து லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கினைப்பாளர் மேஜர்.எஸ்.பி .கணபதி அவர்கள் உரையாற்றினார். அதை தொடர்ந்து தமிழ் துறை தலைவர்.பேராசிரியர் கலில் ரஹ்மான் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் விருதுகள் மற்றும் அவருடைய வரலாரை சிறப்பாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கினார். அதைத் தொடர்ந்து லயன்ஸ் மாவட்ட தலைவர் பேரா கே. செய்யது அகமது கபிர் அவர்கள் போட்டியின் விதிமுரைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இப்போட்டிக்கு இரு தலைப்புகள் கொடுக்கப்பட்டன. முதலாவது தலைப்பு கலாம் கான விளைந்த இந்தியா
இரண்டாம் தலைப்பு கனவு காணுங்கள் என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சற்று வித்தியாசமான பரிசாக திருக்குர்ஆன்,பைபிள்,பகவத் கீதை,திருக்குறள்,காந்தியடிகளின் வரலாறு போன்றவை வழங்கபட்டன. இறுதியில் சாம்பின் பட்டமாக சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

முதல் பரிசு : அண்ணை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கும்பகோணம் நாகா முத்துப்பாண்டியன்

இரண்டாம் பரிசு : அ.விரையா
வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி தன்னாட்சி பூண்டி தஞ்சாவூர்

முன்றாம் பரிசு : சா.ச பிருந்தா அரசு கலைக்கல்லூாரி திருச்சி ஆகியவர்கள் முதல் மூன்று பரிசுகளை தட்டி சென்றனர்

இறுதியில் அதிரை லயன்ஸ் சங்க பொருளாளர் எம்.அப்துல் ஜலில் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.
இனைப்புரையாக கலைக்குழு ஒருங்கினைப்பாளர் பேரா.பி. ஜெய்னபா பேகம் அவர்கள் ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...