மேற்குவங்க தேர்தலில் போட்டியிட 42 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளித்த மமதா பானர்ஜி !
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில்தான், நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிடப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 291 தொகுதிகளுக்கு என்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. இதில் 50 பேர் பெண்கள், 42 பேர் முஸ்லிம்கள், 79 பேர் தலித், 17 வேட்பாளர்கள் பழங்குடியினர்