தமிழகத்திலேயே அதிரையில் தான் அதிக மழை! டுவீட் செய்த இந்திய வானிலை ஆய்வு மையம்!

Posted by - January 12, 2021

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் அதிரை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் தங்கி இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

Read More

அதிராம்பட்டினத்தில் 36.7 மிமீ மழை பதிவு !

Posted by - January 4, 2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து, வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்நிலையில் வரும் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நேற்று பல்வேறு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொறுத்தவரை நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், விட்டு விட்டு மிதமான

Read More

அதிராம்பட்டினத்தில் 44.5 மிமீ மழை பதிவு !

Posted by - December 16, 2020

தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக வலுகுறைந்து பனிப்பொழிவும், குளிரும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கியது. காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை முதலே தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணி வரை பதிவான

Read More

புரேவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தம் !

Posted by - December 3, 2020

2020ம் ஆண்டு பொன்னான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு புண் ஆன ஆண்டாக அமைந்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வலிகளை இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது. கொரோனா, ஊரடங்கு, இவை இரண்டுமே வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத துயரத்தை மக்களுக்கு வழங்கிவிட்டன. அத்துடன் நிவர் புயலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணி நேரங்களில் புரேவி புயல் தென்மாவட்டங்களை நெருங்க போகிறது. மாலை அல்லது நள்ளிரவு பாம்பன் மற்றும கன்னியாகுமரி இடையே கரையை கடக்க

Read More

புதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் – எச்சரிக்கும் வானிலை மையம் !

Posted by - November 28, 2020

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது குறைந்த காற்றழுத்தமாக மாறும். இந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே

Read More

அதிரையில் 64.2 மிமீ மழை பதிவு !

Posted by - November 27, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதி தீவிர புயலாக நேற்று அதிகாலை கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி அதிராம்பட்டினத்தில் 64.2 மிமீ, மதுக்கூரில் 14 மிமீ, பட்டுக்கோட்டையில் 36 மிமீ

Read More

அதிரையில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின்கம்பங்கள் !(படங்கள் & வீடியோ)

Posted by - November 26, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று இரவு 8.20 மணியில் இருந்து கடும் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது மழை மற்றும் காற்று நின்று, இடி மற்றும் மின்னல் இருந்து வருகிறது. சற்று நேரத்தில் வீசிய பலத்த காற்று

Read More

கரையை கடக்க துவங்கியது நிவர் புயல் !

Posted by - November 25, 2020

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தீவிர புயலாக மாறியது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதி தீவிர புயலாக புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் புயலின் முன்பகுதி கரையை கடக்க துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் பலத்த மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புயல் முழுமையாக கரையை கடக்க அதிகாலை 3

Read More

மிரட்டும் நிவர் – மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வர தடை !

Posted by - November 25, 2020

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக இன்று இரவு 8 மணிக்கு மேல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் மற்ற மாவட்ட மக்கள் சென்னைக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Read More

CYCLONE NIVAR : `ECR சாலைக்கு சீல்’ – இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை !

Posted by - November 25, 2020

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல், அதி தீவிரப் புயலாக இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகம், புதுவையில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை –

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)