வண்ணாரப்பேட்டையில் போராடி வரும் இஸ்லாமியர்களுக்காக சமைக்கும் இந்து மக்கள் !

Posted by - February 17, 2020

சென்னையின் ஷாஹீன் பாக் எனப்படும் வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இன்றும் 4வது நாளாக போராட்டமானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போராட்டகளத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்காக ஹிந்துக்கள் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். இதன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, இதுதான் தமிழ்நாடு என்றும், மதநல்லிணக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் !(படங்கள்)

Posted by - February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் தடையையும் மீறி தற்போது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று போராட்டம் நடந்து வரும் வண்ணாரப்பேட்டை போராட்ட மேடையிலேயே திருமணம் ஒன்று நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ஸஹீன் ஷா – சுமையா ஜோடிக்கு

Read More

தடை, தடியடியை மீறி தொடரும் வண்ணாரப்பேட்டை ஷாஹீன் பாக் !

Posted by - February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இந்த தடியடி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த தடியடி சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப்பெற கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் தடையையும் மீறி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தெற்கு டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக்கில் நடைபெற்று

Read More

அதிரை : வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்து தமுமுக & மமக கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - February 16, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிராம்பட்டினத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை தக்வா பள்ளியில்

Read More

சென்னை போலீஸின் பெண்கள் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதம் – சீமான் கடும் கண்டனம்!

Posted by - February 16, 2020

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தின்போது பெண்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் அரச பயங்கரவாதம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப் பயங்கரவாதம் என தெரிவித்துள்ளார். மேலும், பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமையாகும்.

Read More

வண்ணாரப்பேட்டை தடியடி எதிரொலி : கிருஷ்ணாஜிபட்டினத்தில் மறியல் !

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாஜிபட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் மறியலும் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Read More

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட ஒன்று – மு.க. ஸ்டாலின் கண்டனம் !

Posted by - February 15, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்த நிலையில், இணை ஆணையர் தினகரன் தலைமையிலான போலீசார், இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் போராட்டக் களத்திற்கு வந்த தலைவர்களும் இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருந்தும் பெண்கள் முன்னின்று தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். போலீஸ் தடியடியை

Read More

பெண்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்த காவல்துறைக்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் !

Posted by - February 15, 2020

சென்னை வண்ணாரப் பேட்டையில் காவல்துறை நடத்திய அராஜக வெறியாட்டத்திற்கு ஜமாத்துல் உலமா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த உலமா சபையின் அறிக்கையில் , “அமைதி வழியில் போராடிய பெண்கள் மீது காவல்துறை கண்ணியமற்ற முறையில் நடந்தது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் தடியடி நடத்திய காவல்துறை மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் கருப்புச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)