ஒரு ரோஜா தோட்டமும் : சாக்கடை நாற்றமும்!!
வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்.. ஒருவர் ஆடம்பரமான, எல்லா வசதிகளும் உள்ள மாளிகையில் அனைத்து வசதிகளுடன் இருக்கிறார். ஆனால் அவர் வசிக்கும் வீட்டை சுற்றி,குப்பைகளும்,அசுத்தக் கழிவுகளும் கொட்டி கிடக்கிறது. அதைபற்றிய கவலை, அக்கறை அவருக்கு இல்லை. இப்படி இருப்பதால் என்ன நடக்கும்? விரைவில் ஈக்கள், கொசுகள் படையெடுக்கும். டைபாயிடு,மலேரியா,டெங்கு காய்ச்சல் , இப்போது கொரோனா என்று பலவித தொற்று நோய் ஏற்படும் ஆரோக்கியத்தை