கங்கையில் மிதக்கும் பிணங்கள்! பழிபோடும் பீகார் பழிபோகும் உத்தரப்பிரதேசம்!

Posted by - May 12, 2021

இந்து மதத்தின் மிக முக்கியப் புண்ணிய நதியான கங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனவர்களின் உடல்கள் வீசப்பட்டுக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பீகார் மாநிலம், பக்ஸர் மாவட்டம், சௌசா கிராமத்தின் மகாதேவ் கட் வழியாகச் செல்லும் கங்கை நதியில் பல உடல்கள் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன. உத்தரப்பிரதேச மாநில எல்லையிலுள்ள பக்ஸர் மக்கள், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் இறப்பவர்களின் உடல்களை இவ்வாறு கங்கையில் தள்ளிவிடுகின்றனர்’’ எனக் குற்றம்சாட்டினர். கொரோனா சிகிச்சைக்குத்

Read More

‘பொய் சொன்னால் சாமியாராக இருந்தாலும் அறை விழும்”-யோகிக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

Posted by - April 28, 2021

கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதேவேளையில், கட்டுபாடுகளுடன் தடுப்பூசி செலுத்திகொள்வதன் மூலமே கரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடமுடியும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகி இருக்கிறது. டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், இதனால் சிகிச்சைப் பலனிற்றி நோயாளிகள் இறந்ததாகவும் வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

“சங்கிலியால் கட்டுவதா ? சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்குக” – பினராயி விஜயன், ராகுல் காந்தி கோரிக்கை!

Posted by - April 26, 2021

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பதிவு செய்வதற்காக அங்கு சென்றார் கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன். அப்போது உ.பி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சித்திக் காப்பான் சிறை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஏப்ரல் 21-ம் தேதி மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சித்திக் காப்பானின்

Read More

கோயிலுக்கு வந்த 50 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை – உ.பி-யில் தொடரும் கொடூரம் !

Posted by - January 8, 2021

உத்தர பிரதேசத்தில் தினந்தோறும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்கு வந்த 50 வயதுப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியிலுள்ள பதாயூ நகரின் மேவ்லி கிராமத்தில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு 50 வயதான

Read More

உ.பி. பயங்கரம் : அதிகாரிகள் முன்னிலையில் இளைஞரை சுட்டுப் படுகொலை செய்த பாஜக பிரமுகர் !

Posted by - October 16, 2020

உத்தரப்பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களை நோக்கி பாஜக பிரமுகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேஷன் கடையை எங்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் இருதரப்பினரிடையே கடுமையாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இருதரப்பையும் சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். அப்போது உள்ளூர் பாஜக

Read More

57 பெண்களுக்கு கொரோனா.. இரு சிறுமிகள் கர்ப்பம்.. உத்தரபிரதேச அரசு காப்பகத்தின் அவலம் !

Posted by - June 22, 2020

உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் 57 பெண்கள் உள்பட சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அந்த 57 பேரில் இரு சிறுமிகள் உள்பட 5 பேர் கர்ப்பிணியாக உள்ளனர். அந்த இரு கர்ப்பிணி சிறுமிகளில் ஒருவருக்கு எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. கான்பூர் நகரில் அரசு சார்பில் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு ஆதரவற்ற பெண்களும் சிறுமிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஒரு

Read More

கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்ட தலித் சிறுவன் – உத்தரபிரதேசத்தில் கொடூரம் !

Posted by - June 8, 2020

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயசுதான் ஆகிறது.. இந்தப் பையன், ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன் ஆவார். ஓம் பிரகாஷ் ஜாதவ் ரொம்ப ஏழையான விவசாயி ஆவார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் அங்குள்ள கோவிலுக்கு

Read More

13 மணி நேரப் போராட்டம்..ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் – உத்தரபிரதேச அவலம் !

Posted by - June 7, 2020

உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டா – காஸியாபாத் எல்லையில் இருக்கும் கோடா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேந்திரசிங், நீலம் தம்பதி. 30 வயதாகும் நீலம், 8 மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார், லாக்டௌனுக்கு முன்னதாக தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கான சோதனை, ஆலோசனை ஆகியவற்றைக் கேட்டு வந்துள்ளார். லாக்டௌனின் போதும் தொலைப்பேசி மூலம் தனியார் மருத்துவமனையில் ஆலோசனை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நீலமுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் வீட்டுக்கு

Read More

லாக்டவுனுக்கு இடையே அயோத்தியில் ராமர் சிலைக்கு பூஜை செய்த யோகி ஆதித்யநாத் !

Posted by - March 25, 2020

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி முதல் இது நடைமுறையில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த 21 நாட்களும் அனைவரும் வீடுகளில்தான் இருக்க வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வருவதையே மறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் லாக்டவுனை போலீசார் தீவிரமாக அமல்படுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் அயோத்தியில் இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)