அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி !(படங்கள்)
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து கப்பலூர் வழியாக அவனியாபுரம் விரைந்தார். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ராகுல்காந்தி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராகுலின் கார் நேராக மேடையின் பின்புறம் சென்றதை அடுத்து அந்த மேடையில், ராகுலுடன் கே.எஸ்.அழகிரி, கே.சி.வேனுகோபால்,