குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி !
பருவமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மட்டுமல்லாது அங்குள்ள சிறு வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.