அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

Posted by - June 13, 2022

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை மறுநாள் 15-06-2022 புதன்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு

Read More

தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!

Posted by - October 28, 2021

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின் சாதண பொருட்களை பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்ப்பதோடு, வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB

Read More

அதிரையில் நாளை மின்தடை!

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே மின்சாரம் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read More

திமுக அரசின் பெயரை கெடுக்கும் அதிரை மின்வாரியம்?

Posted by - June 10, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(10/06/2021) பிற்பகல் பராமரிப்பு பணிக்காக ஒன்றரை மணிநேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 1 மணிநேரத்திற்கும் மேலாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில், தமிழக அரசின் பெயரை கெடுக்கும் வகையில் அதிரை மின்வாரியம்

Read More

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு !

Posted by - May 26, 2021

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர். இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறுகுறு தொழில்கள் மற்றும் குறைந்தழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது

Read More

அதிரையர்களே! உடனே இந்த நம்பருக்கு உங்க மின்சார மீட்டரை போட்டோ எடுத்து அனுப்புங்க!!

Posted by - May 22, 2021

அதிராம்பட்டினம் மின் நுகர்வோர் கவனத்திற்கு… 10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள நுகர்வோர்களுக்கு தற்போது போடப்பட்டுள்ள முந்தய மாத கணக்கீடு 30.05.2021 வரை கணினியில் நீக்கம் செய்து தாங்கள் அனுப்பும் மின்மானி புகைப்படம் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய கட்டணம் தெரிவிக்கப்படும். +91 90254 37705+91 9445853854ஆகிய எண்களுக்கு அனுப்பவும்.மேலும் அலுவலகத்திற்க்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. – உதவி மின் பொறியாளர்,அதிராம்பட்டினம்.

Read More

அதிரை மக்களே! மின்சார ரீடிங் எடுக்கவில்லை என அசால்ட்டாக இருக்க வேண்டாம்! கொஞ்சம் அலார்ட்டாக இருங்க!!

Posted by - May 19, 2021

கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்திற்கான மின் அளவீடு எடுக்க வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிரையிலும் வீடுகள் தோறும் மின்வாரிய ஊழியர்கள் அளவீடு எடுக்கவில்லை. அவ்வாறு அளவீடு எடுக்காத வீடுகள், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் எவ்வளவு மின் கட்டணம் வந்ததோ அதை தற்போது கட்ட வேண்டும். அடுத்தமுறை விடுபட்ட 2 மாதங்கள் உட்பட 4

Read More

இஸ்லாமியர்களுக்கு அதிரை மின்வாரியத்தின் பெருநாள் வாழ்த்து!

Posted by - May 13, 2021

அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அதிரை மின்சார வாரியத்தின் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Posted by - May 11, 2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்றுமுதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 10ஆம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)