யார் இந்த ஆய்வாளர் ராஜேஸ்வரி?

Posted by - November 13, 2021

| மரம் விழுந்து மரணிக்க இருந்தவரை கரம் கொடுத்து காப்பாற்றியுள்ளார் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர். அவரது செயலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டியுள்ளார். மழை தான்… எங்கும் மழை தான்… அடை மழை அல்ல….அடாவடி மழை…. சென்னையில் பெய்யும் மழையில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலரும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில்தான்…. மழை நீரில் அந்த மனிதாபிமானம் பூத்து மலர்ந்தது. மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க, காவல் துறையினர் உட்பட

Read More

வன்முறையை தூண்டும் வகையில் கொச்சைப் பேச்சு… யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!

Posted by - October 11, 2021

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் முன்னாள் உறுப்பினர் சாட்டை துரைமுருகன் பேசியது சர்ச்சையானது. குமரியில் மலைகளை குடைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாம்

Read More

‘குரூர எண்ணம் கொண்ட பதிவுகள்’ – கிஷோர் கே சாமியை விளாசிய நீதிபதி!

Posted by - June 14, 2021

தலைவர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இடப்பாற்றாக்குறை காரணமாக கிஷோர் கே சாமி சைதாப்பேட்டை சிறைக்குப் பதிலாகச் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் என பல்வேறு தலைவர்கள் குறித்துத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருபவர் யூ டியூபர் கிஷோர் கே சாமி. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் கிஷோர் கே சாமியைக்

Read More

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

Posted by - June 14, 2021

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அதில் 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜாமீன் பெற்று வெளியே

Read More

திருச்சியில் கார் ஊழியருக்கு மிரட்டல் – சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது!

Posted by - June 12, 2021

திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரில் பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த வினோத் என்ற கார் நிறுவன ஊழியர் ஒருவர் செய்த டிவிட் காரணமாக இன்று பிற்பகலில் மிரட்டப்பட்டார். எல்டிடிஇ பிரபாகரன் குறித்து

Read More

மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

Posted by - June 5, 2021

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய மண்டல ஐஜி-யாக பணியிடமாற்றம் செயய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை திருச்சியில் உள்ள அலுவலகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக(ஐஜி) வி. பாலகிருஷ்ணன் பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே இவர் திருச்சி சரக டிஐஜி-யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்வது எப்படி ?

Posted by - April 16, 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப பெறலாம் என தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது : 24.03.2020 முதல் ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)