முதல் நாள் வழக்குப்பதிவு.. மறுநாள் அதிகாலையில் ரெய்டு – கே.சி. வீரமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Posted by - September 16, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், மின்னல் வேகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் சோதனையை தொடங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தேர்தல் பரப்புரையில் அறிவித்தவாறே மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், இப்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான

Read More

CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - September 8, 2021

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் CAA சட்டத்தை

Read More

பெட்ரோல் ரூ. 3 குறைப்பு முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வரை… தமிழக பட்ஜெட்டின் டாப் 10 அறிவிப்புகள் இதோ!

Posted by - August 13, 2021

தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. மேலும் தமிழக சட்டசபை வரலாற்றில் காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கையிலும் கணினி பொறுத்தப்பட்டிருந்தது. இதில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதேநேரம், சில திட்டங்கள் பரவலாக

Read More

முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை குறித்து சிறுபான்மையினர் ஆணையத்தலைவரை சந்தித்த தமிமுன் அன்சாரி!

Posted by - August 11, 2021

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸுடன் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். அப்போது, தமிழக சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி 10 வருடங்களை தாண்டி 20 வருடங்களுக்கும் மேலாக வாடி வரும் முஸ்லிம் கைதிகளின் முன் விடுதலை மற்றும் அவர்களின் மனித உரிமைகள் குறித்த மனு ஒன்றை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் கையளித்து விளக்கி

Read More

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு!

Posted by - August 11, 2021

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் விருது வழங்குவது வழக்கம். அதன்படி வருகிற சுதந்திர தின விழாவில் பரிசு-விருது பெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.25 லட்சம் மற்றும் விருது அந்த மாநகராட்சிக்கு வழங்கப்படுகிறது. கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்குகிறார். சிறந்த

Read More

கட்டுமானப்பொருட்கள் விலையேற்றம்.. அரசு வேடிக்கை பார்க்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு!

Posted by - June 16, 2021

கட்டுமான பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை முடிந்து, தற்போது இயல்புநிலை மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பொருட்களின் நிலை மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செயற்கையான விலையேற்றம் காரணமாகவே கட்டுமான பொருட்களின் விலை உயர்வதாகவும் இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னை தலைமைச்

Read More

அதிரை கடற்கரைத்தெருவில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகைத்தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்!(படங்கள்)

Posted by - June 16, 2021

கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கொரோனா நிவாரணமாக நான்காயிரத்தில் முதற்கட்டமாக ரூ. 2,000 கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கொரோனா நிவாரணமாக 2ம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை இம்மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டித்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் கொரோனா நிவாரணமாக

Read More

அதிரையில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகை தொகுப்பு திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

Posted by - June 15, 2021

கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மே மாதம் முதற்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் தவணை ரூ.2000 நிவாரணம், இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அதனுடன் சேர்த்து

Read More

24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் – தமிழக அரசு அதிரடி!

Posted by - June 13, 2021

தமிழ்நாட்டிலுள்ள முக்கிய ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் பணியிடமாற்றம் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை, மதுரை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு

Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் நியமனம்!

Posted by - June 13, 2021

தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யார் இந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் ? குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003ம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)