ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்!

Posted by - April 11, 2021

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடனான கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்துர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அரசன் அசோகனும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினரான மாதவராவும் களமிறங்கினர். வேட்புமனுத் தாக்கல் செய்த மறுநாளே மாதவராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் இரண்டு நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் செய்து

Read More

தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு!

Posted by - April 6, 2021

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது. காலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன்

Read More

அதிராம்பட்டினத்தில் 63 சதவீத வாக்குப்பதிவு!

Posted by - April 6, 2021

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் 63% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது மொத்தமுள்ள 27473 வாக்குகளில், 17308 வாக்குகள் பதிவாகியுள்ளது.

Read More

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

Posted by - April 6, 2021

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. பலத்த பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறுதியாக மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடை அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இரவு 7

Read More

பாஜகவுக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட குவிந்த வடமாநிலத்தவர்கள்? பதற்றத்தில் துறைமுகம்!

Posted by - April 6, 2021

சென்னை துறைமுகம் தொகுதியில் வடமாநில இளைஞர்களை அழைத்து வந்து பாஜக சார்பில் கள்ள ஓட்டு போட முயற்சி நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் பிராட்வே பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று பிற்பகலில் சுமார் 100 இளைஞர்கள் கூட்டமாக வந்துள்ளனர். அவர்களைப் பார்த்து சந்தேகம் அடைந்த அந்த ஏரியா மக்கள் யார் நீங்கள், உங்களை இதற்கு முன்பு

Read More

தமிழக சட்டமன்றத்தேர்தல் : அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவும், கருத்தும்!

Posted by - April 6, 2021

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த தலைவர்கள், வாக்களித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி: தமிழக முதல்வரும் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் சிலுவம்பாளையம் தொடக்க நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, “தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையினை

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பகல் 1 மணி நிலவரம்!

Posted by - April 6, 2021

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வரும் மணி நேரங்களில் வாக்குப்பதிவு சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அதிரையில் விறுவிறு வாக்குப்பதிவு!

Posted by - April 6, 2021

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனடிப்படையில் வாக்குப்பதிவு தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7மணி முதல் தொடங்கியது. முன்னதாக அதிகாரிகள் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் செலுத்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் அவ்வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டுவந்து சீலிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு முறையாக தொடங்கப்பட்டது. அதிரையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து

Read More

234 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

Posted by - April 5, 2021

தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு

Read More

பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

Posted by - April 5, 2021

நாளை தமிழகத்தில் சட்டசபை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அவர் அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கூறியதாவது: தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழக சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாகும். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் உள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)