தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது ஓமிக்ரான் கொரோனா… சென்னையில் ஒருவருக்கு பாதிப்பு!
தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாக ஓமிக்ரான் கருதப்படுகிறது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்தியாவில் வெறும் 2 ஓமிக்ரான் கேஸ்கள் மட்டுமே இருந்தது. கர்நாடகாவில்