டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - September 9, 2021

தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி கேட்டு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுக்கூர் பேரூர் தமுமுக சார்பில்

Read More

கொரோனாவால் இறந்த கோவில் பூசாரியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

Posted by - June 19, 2021

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என பூசாரியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மதுக்கூர் தமுமுகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஃபவாஸ், தவ்ஃபிக், தமிழ், பாசித் ஆகியோர் அடங்கிய மதுக்கூர் தமுமுகவின் நல்லடக்க குழு, கோவில் பூசாரி

Read More

நாங்கள்தான் அசல் தமுமுக – அடித்துக்கூறும் மா.செ! எஸ்பி-யிடமும் புகார்!

Posted by - June 14, 2021

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்று பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் :1/2015) எங்களது அமைப்பை ஐவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட ரீதியான எந்த ஆதாரம் மற்றும் முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம்

Read More

மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ!(படங்கள்)

Posted by - June 13, 2021

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் சந்தித்து சால்வை அணிவித்தனர். அப்போது உதவி மையத்தை ஆய்வு செய்த அவர், மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மைய பணிகளை வெகுவாக பாராட்டினார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்திப்பு நடைபெற்றது.இச்சந்திப்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ கூறியதாவது : கொரோனாவின்

Read More

‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

Posted by - June 6, 2021

மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள், பயணிகள் என பலதரப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்ட வருகின்றது. இந்நிலையில் மதுக்கூர் தமுமுக சார்பில் ‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ என்ற நோக்கத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் முகாம் இன்று மதுக்கூர்

Read More

அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!

Posted by - June 3, 2021

அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த நிர்வாகியும் எங்கள் அன்பு தம்பியுமான MA சாதீக் பாட்ஷா இறை அழைப்பை ஏற்று கொண்டுவிட்டார் என்ற செய்தி என்னை நிலை குழைய செய்து விட்டன. சமூகத்திற்கு சங்கடங்கள் ஏற்படும் போதெல்லாம் சளைக்காமல் களமாடும் என் அன்பு தம்பி இறைவனடி சேர்ந்தார் என்றால்

Read More

மதுக்கூரில் தொடர்ந்து ஆறாவது நாளாக உணவு வழங்கிய தமுமுகவினர்!

Posted by - June 1, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக மதிய உணவு வழங்கப்பட்டது. மதுக்கூர் தமுமுகவின் சார்பில் மதுக்கூர் வழியாக வெளியூர் செல்லும் மக்கள், ஏழைகள் மற்றும் அனாதைகள் என சுமார் 60 நபர்களுக்கு மதிய உணவும், 800 நபர்களுக்கு தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. மேலும்

Read More

ஆவடி : உன்னதமான பணியில் தமுமுகவினர்!

Posted by - May 24, 2021

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு இல்லாத உயிர் இழப்புகள் 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில், ஊடங்கை தமிழக அரசு அமல்படுத்தி தொற்றை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் உன்னதமான சேவையை பல்வேறு அமைப்புகளும்

Read More

பாஜக பிரமுகரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள்!!

Posted by - May 21, 2021

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மெக்கானிக் கருப்பையா என்பவர் நேற்று(20/05/2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தமுமுக-வினரிடம் வேண்டுகோள் விடுத்துனர். இதனையடுத்து தேனி மாவட்ட தமுமுக தலைவர் அப்துல்லாஹ் பத்ரி தலைமையிலான தமுமுக குழுவினர், பாஜக பிரமுகர் மெக்கானிக் கருப்பையாவின் உடலை தேவதானப்பட்டி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் உடலை தமுமுகவினர்

Read More

கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

Posted by - May 17, 2021

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை நகர தமுமுக ஆம்புலன்சை தாமரங்கோட்டை மக்களின் சேவைக்காக வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், கா.அண்ணாதுரை முன்னிலையில் தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்களது ஆம்புலன்சை சேவைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த நிகழ்வின்போது அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)