தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

Posted by - March 7, 2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட 22வது பொதுக்குழு கூட்டம், நேற்று 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை VPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் மற்றும் மாநில செயலாளர் கோவை அப்பாஸ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் விபரம் : மாவட்ட தலைவர் : அதிரை ராஜிக் மாவட்ட செயலாளர் : ஹாஜா ஜியாவுதீன் மாவட்ட பொருளாளர் : அப்துல்

Read More

தஞ்சை மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி தேர்வு தேதி அறிவிப்பு!!

Posted by - January 25, 2022

கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தஞ்சாவூர் மாவட்ட 10th, +2 மாணவர்களுக்கான இணையவழி அடைவு தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி முதல் மாணவர்களுக்கான தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட முதல் திருப்புதல் தேர்வுக்கான பாட திட்டத்தில் இருந்து 25 கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்திருப்பதுடன், google sheet முறையில் தேர்வு எழுத 40 நிமிடம் வழங்கப்படும் என்றும் தேர்வு

Read More

கனமழையால் மூழ்கிய பயிர்கள் : எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

Posted by - November 12, 2021

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை உடனடியாக பாதுகாக்கவும், பயிர் சேத விவரங்களை நேரில் கண்டறிந்து

Read More

தஞ்சை மாவட்ட அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் – அமைச்சர், அரசு அதிகாரிகள் பங்கேற்பு!

Posted by - October 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று 30/10/2021 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக்கூட்டம்(படங்கள்)

Posted by - October 28, 2021

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம்(26/10/2021) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

தஞ்சாவூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!

Posted by - October 26, 2021

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியுடைய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இஆப அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு

Read More

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - September 9, 2021

தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி கேட்டு தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் தமுமுக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுக்கூர் பேரூர் தமுமுக சார்பில்

Read More

தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வருகை ! தொண்டர்கள் வரவேற்பு!

Posted by - July 7, 2021

திருச்சியிலிருந்து திருவாரூருக்குச் செல்லும்வழியில் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமைமாலை வந்த தமிழக முதல்வருக்கு திமுகநிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். இதையடுத்து, திருச்சியிலிருந்து திருவாரூர் நோக்கி காரில் புறப்பட்டார். வழியில் தஞ்சாவூர் மேல வஸ்தா சாவடியில்மேம்பாலம் அருகே முதல்வருக்குத் தமிழகஅரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்), செ. ராமலிங்கம் (மயிலாடுதுறை),

Read More

தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு !

Posted by - July 2, 2021

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களும், வியாபாரிகளும் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் இத்தொற்று இன்னும் குறையவில்லை என மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், அரசு ஒட்டுமொத்தமாக தளர்வுகளை அளிக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் எங்கள் மாவட்டமான

Read More

கொரோனாவால் இறந்த கோவில் பூசாரியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

Posted by - June 19, 2021

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என பூசாரியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மதுக்கூர் தமுமுகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஃபவாஸ், தவ்ஃபிக், தமிழ், பாசித் ஆகியோர் அடங்கிய மதுக்கூர் தமுமுகவின் நல்லடக்க குழு, கோவில் பூசாரி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)