கனமழையால் மூழ்கிய பயிர்கள் : எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

Posted by - November 12, 2021

வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களாக வெழுத்துவாங்கிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மேலும் இந்த வடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை உடனடியாக பாதுகாக்கவும், பயிர் சேத விவரங்களை நேரில் கண்டறிந்து

Read More

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அதிரை – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!(படங்கள்)

Posted by - November 3, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த 17செ.மீ மழை காரணமாக அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், வடிகால்கள் தூர்வாரப்படாததாலும் மழைநீர், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரில் பிரதான தெருக்கள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன், பேரூராட்சி நிர்வாகம் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

Read More

தஞ்சை மாவட்ட அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் – அமைச்சர், அரசு அதிகாரிகள் பங்கேற்பு!

Posted by - October 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று 30/10/2021 சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழக அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக்கூட்டம்(படங்கள்)

Posted by - October 28, 2021

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம் நேற்று முன்தினம்(26/10/2021) நடைபெற்றது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் துரை. ரவிச்சந்திரன் இ.ஆ.ப ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அரசு தலைமை கொறடா கோவி. செழியன்

Read More

தஞ்சாவூர் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!

Posted by - October 26, 2021

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, தகுதியுடைய பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இஆப அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு

Read More

மதுக்கூர் அருகே ரேஷன் கடையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு!

Posted by - July 7, 2021

மதுக்கூர் அருகே ரேஷன் கடையில் அரிசியின் தரம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுதியில் மகாத்மாகாந்தி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சந்தித்து அவர்களது தேவைகளையும், கால்நடைகள் வளர்ப்பதற்கு கடன் வழங்குவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக தங்களது கிராமங்களில் பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சானிடைசர் பயன்படுத்தி சுத்தமாக இருக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு

Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் நியமனம்!

Posted by - June 13, 2021

தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். யார் இந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் ? குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, 2003ம்

Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்!

Posted by - June 13, 2021

தஞ்சை மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் ஐஏஎஸ் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட உத்தரவில், 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read More

அதிரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு!(முழு விவரம்)

Posted by - May 30, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்பிடி இன்று மாலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)