அதிரையில் நாளை தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு பாராட்டு விழா !
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் தமிமுன் அன்சாரி. தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் நாகை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். மேலும் மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சட்டமன்றத்தின் உள்ளும், வெளியிலும் தொடர்ந்து குரல் எழுப்பியவர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டாலும், பாஸிசத்திற்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவின் மதற்ச்சார்பற்ற முற்போக்கு