கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

Posted by - February 25, 2021

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள், கேரளா, மகாராஷ்டிராவில்

Read More

‘புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை ; அடுத்து தமிழகம்தான்’ – எச்சரிக்கும் திருமாவளவன் !

Posted by - February 23, 2021

புதுச்சேரி மாதிரிதான் தமிழகத்திலும் நடக்க கூடும், புதுச்சேரியில் நடப்பது தமிழகத்திற்கான ஒத்திகையே என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் நாராயணசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பை வெல்ல முடியாமல் பதவியை இழந்தது. இந்த நிலையில்தான், முன்னதாக தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் திருமாவளவன் கூறியதாவது : ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் பாஜகவின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு தக்க

Read More

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி ?

Posted by - February 21, 2021

முதல் முறையாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளீர்களா, உங்களின், வாக்காளர் அடையாள அட்டையை எப்படி டவுன்லோடு செய்வது என்று தெரியாமல் உள்ளீர்களா? கவலை வேண்டாம். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பார்ப்போம். இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வசதியை உருவாக்கி உள்ளது. பொதுவாக நீங்கள் இசேவை மையத்திற்கு சென்றால் உங்களின்

Read More

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் !

Posted by - February 18, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம். செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக உளதுறை செயலாளர் எஸ்கே பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின் படி ஐபிஎஸ் அதிகாரிகளின் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ◆சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் ◆சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் ◆நெல்லை மாநகர காவல் ஆணையராக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார் ◆சேலம் நகர காவல்

Read More

தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு !

Posted by - February 17, 2021

தமிழகத்தில் மே 3ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் முதல்முறையாக தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு பகல் 1.15 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. மே 3 ஆம் தேதி மொழிப்பாடம், மே 5 ஆம்

Read More

தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம் என்றால் என்ன ?

Posted by - February 11, 2021

“தமிழ்நாடு குண்டர்கள் தடுப்பு சட்டம்” இச்சட்டத்தின் சரியான பெயர், “தமிழ்நாடு கள்ளாச்சாராயம் காய்ச்சுவோர், இணையவெளிச் சட்டக் குற்றவாளிகள் (Cyber law offender), போதைப் பொருள் குற்றவாளிகள் (Drug offender), வனக் குற்றவாளிகள், குண்டர்கள், விபச்சாரத் தொழில் குற்றவாளிகள், மணல் திருட்டு குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசை நில அபகரிப்பு குற்றவாளிகள் மற்றும் ஒளிக்காட்சி திருட்டு (திருட்டு VCD) குற்றவாளிகள் ஆகியோர்களின் அபாயகர செயல்கள் தடுப்புச் சட்டம், 1982” ஆகும். சட்டத்தின் நோக்கம் : மேலே விவரிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின்

Read More

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் உடனே ரயில்களை இயக்க வேண்டும் : ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல் !

Posted by - February 10, 2021

திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மீட்டர் கேஜ் இரயில் பாதையாகும். இந்த மீட்டர் கேஜ் பாதை அகல இரயில் பாதையாக மாற்றப்பட்டு 2019 ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனால் இப்பகுதியில் இருந்து சென்னை க்கான விரைவு இரயில்சேவை 2006ல் நிறுத்தப்பட்டது. அகல இரயில் பாதை பணிகள் நிறைவுற்ற பின்னரும் இத்தடத்தில் முழுமையான இரயில் சேவை துவங்கப்படவில்லை. எனவே இத்தடத்தில் இரயில் சேவைகளை தமிழ் புத்தாண்டில் துவங்கவேண்டி மத்திய இரயில்வே அமைச்சர்

Read More

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் !

Posted by - January 31, 2021

தமிழகம் முழுவதும் நாளை (நாளை 31ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டுகளித்த ராகுல் காந்தி !(படங்கள்)

Posted by - January 14, 2021

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து கப்பலூர் வழியாக அவனியாபுரம் விரைந்தார். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ராகுல்காந்தி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராகுலின் கார் நேராக மேடையின் பின்புறம் சென்றதை அடுத்து அந்த மேடையில், ராகுலுடன் கே.எஸ்.அழகிரி, கே.சி.வேனுகோபால்,

Read More

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி !

Posted by - January 13, 2021

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். ஜல்லிக்கட்டு போட்டிகளை காண கூட்டமும் அலைமோதும். மதுரை அவனியாபுரத்தில் தை 1-ஆம் தேதி (ஜன.14) இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுபோட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)