தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது. காலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன்