தேசத்துரோக சட்டத்துக்கு தடை ; வழக்கு பதிய கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!
தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே இந்த தேச துரோக சட்ட பிரிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கர்நாடகத்தை சேர்ந்த இவர் தாக்கல் செய்த மனுவில், தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்தை எதிரானது.