அதிரை மீன் மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் – களையெடுத்த கலெக்டர்!
அதிராம்பட்டிணம் தக்வா மீன் மார்கெட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதனையடுத்து அதிராம்படினம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு கொரோனா விதிமுறைகள் மீறப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். தகவலை அடுத்து பட்டுக்கோட்டை துணையாட்சியர் பாலச்சந்திரன் இன்று நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்கெட்டில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதை உறுதி செய்து