ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும் RSS அமைப்பிற்கு எதிரான ஹேஷ்டேக் !

Posted by - April 15, 2020

சென்னையில் கொரோனா நிவாரண உதவிப்பணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாற்ற போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து #CheannaiCorpRemoveRSS என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி ட்விட்டர்வாசிகள் பலரும் சென்னை மாநகராட்சிக்கு கண்டனமும், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணியாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)