அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!

Posted by - June 30, 2022

அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று  மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குதிசை காற்றின்

Read More

அதிரையில் கொட்டித் தீர்க்கும் மழை!

Posted by - February 12, 2022

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் தணிந்து, வானம் மேகமூட்டத்துடனேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மெல்ல ஆரம்பித்த மழை, அவ்வப்போது கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. மழையுடன் சேர்த்து குளிர்ந்த காற்றும் அடிப்பதால், அதிரையின் வானிலை ஊட்டியை போன்று உள்ளது.

Read More

வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!

Posted by - January 2, 2022

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும் மழைநீர் புகுந்து மிதக்கின்றது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பருவமழை காலத்தில் வடிகால்களை தூர்வாராததே பிலால் நகரின் அவலநிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து

Read More

கொட்டும் கனமழை – தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Posted by - November 25, 2021

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் பேய் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என பல இடங்களிலும் நல்ல மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக

Read More

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் ஆய்வு – பயிர் சேதங்களை கணக்கிட அமைச்சர்கள் குழு அமைப்பு!

Posted by - November 11, 2021

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருப்பூண்டியில் தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இளம் நாற்றுகள் நீரில் அழுகத் தொடங்கியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்

Read More

அதிரையில் உடையும் நிலையில் குளம் ! 600 குடும்பங்களின் நிலை என்ன?

Posted by - November 9, 2021

அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் செல்ல வழி இல்லாமாகிவிட்டது. இதனால் அக்குளம் உடந்து நீர் வெளியேரினால் அருகில் உள்ள தாழ்வான பகுதியான நண்டுவெட்டு குப்பம் எனும் பிலால் நகரில் வசிக்கும் குடும்பங்களின் நிலை வெகுவாக பாதிக்கும் நிலை

Read More

2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Posted by - November 9, 2021

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்ககடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Read More

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அதிரை – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!(படங்கள்)

Posted by - November 3, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று ஒரே நாளில் பெய்த 17செ.மீ மழை காரணமாக அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளாலும், வடிகால்கள் தூர்வாரப்படாததாலும் மழைநீர், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரில் பிரதான தெருக்கள் பலவற்றிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பலரும் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன், பேரூராட்சி நிர்வாகம் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்

Read More

ஒருநாள் இரவு மழைக்கே தாங்காத அதிரை… நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அவலம்!

Posted by - November 3, 2021

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 3 மூன்று நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் விடாமல் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 13 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அதிரை நகரம் முழுவதும் வெள்ளநீரில் தத்தளிக்கிறது. நேற்று இரவு முழுவதும்

Read More

நவ. 4 வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை.. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Posted by - October 31, 2021

தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை இரண்டும் சேர்ந்தும் தீவிர மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)