காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா!
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி என முடிவு வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி சோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய