எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை! தொடர்ந்து 8வது நாளாக விலையேற்றம்!!

Posted by - March 30, 2022

கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இன்று 9வது நாளாக பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து

Read More

கொடைக்கானலில் சதமடித்த பெட்ரோல் விலை – மக்கள் கடும் அவதி!

Posted by - June 13, 2021

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.04 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்கின்றன. தற்போது இதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மே மாதம் 2ஆவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் குறைந்தது. இதையடுத்து தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் திண்டுக்கல்

Read More

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரையில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

Posted by - June 10, 2021

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தொட்டுவிட்டது. இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிரையில் நான்கு இடங்களில் இன்று

Read More

தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை – தவிக்கும் வாகன ஓட்டிகள்!

Posted by - May 21, 2021

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.94.71 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.88.62 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு

Read More

தொடர்ந்து உச்சம் தொடும் பெட்ரோல் டீசல் விலை – அதிருப்தியில் பொதுமக்கள் !

Posted by - February 13, 2021

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு

Read More

வாகன ஓட்டிகளுக்கு பேரிடி… பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு !

Posted by - March 14, 2020

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்துவதால் அதன் விலையும் உயரும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எரிப்பொருளின் தேவை குறைந்ததால் கடந்த 4 அல்லது 5 நாட்களாக தொடர்ந்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)