கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் TNTJவினர் – நேரில் அழைத்து பாராட்டிய பேராவூரணி எம்எல்ஏ!
கொரோனா பெருந்தொற்றால் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடர் கொரோனா இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வத்துடன் ஜாதி மத பேதமின்றி நல்லடக்கம் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளை பேராவூரணி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆவணம் பெரியநாயகி புரம் பகுதியில் வீடு வீடாக