பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயத்தில் கொரோனா நிவாரண பொருள் வழங்கல்!

Posted by - August 15, 2020

உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை திருமண்டல பேராயர் முனைவர் Rt. Rev.சந்திரசேகர் அவர்கள் பேரிடரை வருமையில் இருக்கும் 50குடும்பத்திற்கு நிவாரன பொருள்களை வழங்கினார்கள். சமுதாய இடைவெளி கடைபிடிக்கபட்டது.

Read More

பட்டுக்கோட்டையில் உலக சாதனையில் ஈடுபட்ட 4 வயது சிறுவன் !

Posted by - June 8, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த என்பவரின் மூன்று வயது 11 மாத மகன் சிறுவன் திவ்யதர்ஷன். இச்சிறுவன் 50 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், திருக்குறளில் 133 அதிகாரங்கள், 193 நாடுகள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்கள், மகாபாரதத்தில் கௌரவர்கள் 60 பேரின் பெயர்கள் ஆகியவற்றை மிக வேகமாக கூறி ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் தடம் பதிக்கும் உலக சாதனை முயற்சியில் இன்று ஈடுபட்டான். பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி

Read More

பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு !

Posted by - June 1, 2020

பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து குற்ற நடவடிக்கைகள் குறைப்பது குறித்து போலீசாருடன் புதிய டிஎஸ்பி ஆலோசனை நடத்தினார். பட்டுக்கோட்டை சரக டிஎஸ்பி-யாக பொறுப்பேற்றுள்ள புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் ஆய்வு!!

Posted by - May 21, 2020

தஞ்சாவூர் மாவட்டம்;பட்டுக்கோட்டை, அரசு மருத்துவமனையில் மாவட்ட துணை ஆட்சியர் மருத்துவ மனைக்கு நேரில் சென்று அனைத்து வார்டுகள் சுத்தமாக உள்ளதா நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை செய்யப்படுகின்றதா என்று ஆய்வு செய்தார். அப்போது டாக்டர் நீயூட்டன் அவர்களிடம் இதுகுறித்து கேட்ட போது நாள் ஒன்றுக்கு இப்போது ஆயிரம் நோயாளிகள் வருகிறார்கள் எனவும் ஊரடங்கு காரணமாக குறைவாக இருக்கிறது எனவும் மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் வரை வெளி நோயாளிகள் வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

Read More

அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!

Posted by - April 30, 2020

தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது பலகடைகளில் (சானிடைசர்/வாஸ்பேஷன்) கை கழுவும் வசதியானது அமைக்கப்படாமல் இருந்தது.இதனை கவனித்த நகராட்சி ஆணையர் கட்டாயம் கை கழுவும் வசதி அமைக்க வலியுறுத்தி கடை உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர்.

Read More

தண்ணீர், முறுக்கு என காவலர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்..!

Posted by - April 30, 2020

தஞ்சாவூர் மாவட்டம்; பேராவூரணியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். இவர் பெங்களூர்வில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி பட்டுக்கோட்டை தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எதிரொலி காரணத்தினால் இந்திய முழுவது 144 தடை அமலில் இருப்பதால் சந்திரமோகன் தனது மனைவியை அவர் பணிபுரியும் வங்கியில் காலை விட்டு மாலை அழைத்து செல்வது வழக்கம். இதே போல் தினமும் வந்து சென்றுகொண்டிருந்த சமூக ஆர்வலர் சந்திரமோகன். இரவு பகல் பார்க்காமல் பணி செய்யும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)