பட்டுக்கோட்டை பள்ளிவாசலில் பட்டப்பகலில் திருட்டு!

Posted by - April 5, 2021

பட்டுக்கோட்டையில் நேற்று மஸ்ஜிதே இப்ராஹிம்(ரயிலடி பள்ளி) பள்ளிவாசலில் பட்டப்பகலில் அத்துமீறி தலையில் தொப்பியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருக்கும் அலமாறி உள்ளிட்டவற்றை சோதனையிடுகிறான். அதில் ஏதும் கிடைக்காததால் அங்கு மாட்டப்படிருக்கும் சட்டை பையில் இருந்த பணம், பைக் சாவி ஆகியவற்றை எடுத்து வெளியே வந்த அந்த மர்ம ஆசாமி பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். இந்த காட்சி அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகி உள்ளது. திருடு போயுள்ள பைக்கில், பள்ளிவாசலின் சந்தா வசூல் புக் ஆகிய முக்கிய ஆவணங்கள்

Read More

அதிரைக்கு காஸ்டிக் சோடா தொழிற்சாலை வேண்டாம்! அசாதுதீன் உவைசி வலியுறுத்தல்!

Posted by - April 1, 2021

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, அரசியல் கட்சியினர் சுழன்று சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நட்சத்திர தலைவர்கள் பலர் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் உவைசி, பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்தை ஆதரித்து அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

Read More

அதிரையில் திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை தீவிர பிரச்சாரம்!

Posted by - March 30, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 1 வாரமே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக கா. அண்ணாத்துரை போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திமுக வேட்பாளர் கா. அண்ணாத்துரை இன்று அதிராம்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு அதிரை முழுவதும்

Read More

அதிரையில் ஜி.கே. வாசன் பிரச்சாரம்!(படங்கள்)

Posted by - March 29, 2021

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். ரங்கராஜனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் இன்று அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஜி.கே. வாசன், மீனவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முதலில்

Read More

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி : களத்தில் 8 வேட்பாளர்கள் !

Posted by - March 23, 2021

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவைகள் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இம்முறை 8 பேர் களம் காண்கின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும் வரிசையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்னணு வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கா. அண்ணாதுரை, இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.

Read More

முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?

Posted by - March 12, 2021

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டையில் திமுக, தமாகா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. என்னது, தமிழ் மாநில காங்கிரஸா என்று ஜெர்க் ஆகக் கூடாது. சாட்சாத் தமாகா-வே தான். திமுகவுக்கு இங்கு கடும் சோதனை காத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இன்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று, ‘இது வேட்பாளர்கள் பட்டியல் அல்ல; திமுக வெற்றியாளர்கள் பட்டியல்’ என்றார். அவ்வளவு கான்ஃபிடன்ஸோடு பேசிய ஸ்டாலினுக்கே கிலி

Read More

தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு -பட்டுக்கோட்டையில் களமிறங்குகிறார் ரங்கராஜன் !

Posted by - March 12, 2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மாநில

Read More

பட்டுக்கோட்டை தொகுதி திமுகவுக்கு ?

Posted by - March 11, 2021

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலில் பட்டுக்கோட்டை இடம்பெறவில்லை. இதனால் பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவ்வாறு திமுக களமிறங்குவது உறுதியாக அறிவிக்கப்பட்டால், பட்டுக்கோட்டை தொகுதியில் தாமரங்கோட்டை பார்த்திபன் போட்டியிட

Read More

திமுக : பட்டுக்கோட்டை தொகுதி யாருக்கு ?

Posted by - February 27, 2021

வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்ட பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார். இதனை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு யாருக்கு எவ்வளவு சீட் என தலைமை கழக நிர்வாகிகள் பரீசீலனை செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக விருப்பம் தெரிவித்து பலரும் மனு செய்துள்ளதாக தகவல்கள்

Read More

கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு !

Posted by - February 10, 2021

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)