நவ. 4 வரை தமிழ்நாட்டில் தீவிர கனமழை.. 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
தமிழ்நாட்டில் நவம்பர் 4 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை இரண்டும் சேர்ந்தும் தீவிர மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு