வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தமிமுன் அன்சாரி தலைமையில் ஈசிஆரில் மஜகவினர் மறியல்!

Posted by - September 27, 2021

ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மஹா பஞ்சாயத்து என்ற பெயரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், CPM, CPI உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி

Read More

வாணியம்பாடியில் மஜக முன்னாள் துணை செயலாளர் வெட்டி படுகொலை!

Posted by - September 10, 2021

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார். இந்த நிலையில் வசீம் அக்ரம் ஜீவா நகர் பகுதியில் மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வெளியே வந்தார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வசீம் அக்ரமமை சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் உடலின்

Read More

ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு – மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு !

Posted by - March 12, 2021

ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர தலைமை செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (10.03.2021) சென்னையில் நடைபெற்றது. இதில் நடப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நிலைபாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய

Read More

அதிரை அப்துல் காதர் ஆலிம் மறைவிற்கு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி இரங்கல் !

Posted by - June 25, 2020

அதிரை அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மறைவிற்கு மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, தப்லீக் ஜமாத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும் , சிறந்த மார்க்க அறிஞருமான மரியாதைக்குரிய அதிரை. அப்துல் காதர் ஹஜ்ரத் அவர்கள் இன்று காலமாகி விட்டார்கள் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். மெல்லிய தென்றல் காற்று போல, தன் பணிகளை அமைதியாக மேற்கொண்டு அனைவரின் அன்பையும் பெற்ற சான்றோராக வாழ்ந்து

Read More

உயிர் காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல் !

Posted by - April 7, 2020

கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)