அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !
அதிராம்பட்டினம் – மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்தனர். அதில் ஆட்டோவின் முகப்பில் உட்கார்ந்து பயணித்த ஒருவருக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம்