குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
குறுவை சாகுபடி பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை தண்ணீரை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 97.33 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது. வழக்கமாக மேட்டூர் அணை நீர்