ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னென்ன ?
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில மாவட்டங்களில் பாதிப்பு அதே நிலையில்தான் உள்ளது. அதனால், பாதிப்பு குறையாத மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தும், பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்தும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய