கேரளா முதல்வரானார் பினராயி விஜயன் – உளமார உறுதி கூறி பதவியேற்றார்!

Posted by - May 20, 2021

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 140 சட்டசபை தொகுதிகளில் எல்டிஎப் (இடதுசாரிகள்) கூட்டணி 99 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியாது என்பதை உடைத்து, எல்டிஎப் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி வென்றது. இதையடுத்து இன்று மாலை கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருடன் 3 பெண் அமைச்சர்கள்

Read More

கேரளாவில் முழு ஊரடங்கு – முதல்வர் பினராயி விஜயன்

Posted by - May 6, 2021

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்படுங்கள் அமல்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்படுங்கள் அமலாகிறது. இதனையடுத்து , கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Read More

கேரள தேர்தல் கள சரித்திரத்தை மாற்றி எழுதிய பினராயி விஜயன் யார் ?

Posted by - May 4, 2021

சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். ‘ஐந்து வருட ஆட்சிக்கு பின்னர், அதே அரசியல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு கைப்பற்றப்போகிறது’ என்ற ஒரு வரலாற்று தருணத்தை கேரளா காணப்போகிறது. கேரளாவில் எந்த முதல்வரும், ஏன் எந்த மார்க்சிஸ்ட் முதல்வர்களும் செய்யாத இந்த சாதனையை பினராயி விஜயன் செய்ய இருக்கிறார். இந்தத் தேர்தலின் முடிவை கம்யூனிசத் தலைவர் பினராயி விஜயனின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும். பினராயி விஜயன் யார்? கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற

Read More

இருந்த ஒன்னும் போச்சு – கேரளாவில் வாஷ்அவுட் ஆன பாஜக!

Posted by - May 3, 2021

கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கெத்தாக களம் இறங்கியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளும் கட்சிக்கு கடுமையான போட்டி கொடுக்க வேண்டும் என்று களம் கண்டது. இந்த முறையாவது கேரளாவில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டும் என்று பாஜக தனியாக கோதாவில் குதித்தது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான

Read More

கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் சரித்திர சாதனை – மீண்டும் முதல்வராகிறார் பினராயி விஜயன்!

Posted by - May 2, 2021

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்டுகள் 93

Read More

திங்கள் அன்றே பதவியேற்பு விழா – ஆச்சர்யப்பட வைக்கும் பினராயி விஜயன்!

Posted by - May 1, 2021

இடதுசாரிகள் கூட்டணி ஒரு வேளை வெற்றி பெற்றால், திங்கள் அன்றே பதவியேற்பு விழா நடத்த ஏற்பாடுகளை செய்யுங்கள் என வாய்மொழியாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளையே முடிவுகள் தெரிந்துவிடும் என்பதால், அரசியல் கட்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன. கேரளத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில்,

Read More

தமிழகம், கேரளாவை புகழ்ந்து தள்ளும் வடமாநில சேனல்கள் – ஏன் தெரியுமா ?

Posted by - April 25, 2021

தமிழகம், கேரள மாநிலங்கள் வட மாநிலங்களை விட சிறந்த மருத்துவ கட்டமைப்புகளை கொண்டுள்ளதாக வட மாநில சேனல்கள் பாராட்டி வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனாவின் முகம் மீண்டும் மக்களை படுத்தி எடுத்து வருகிறது. உலக நாடுகள் எங்கிலும் இல்லாத வகையில் தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.நாட்டில் கொரோனா நோயாளிகள் தினமும் பெருகி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முக்கியமாக பயன்படும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை, அத்தியாவசிய

Read More

கேரளா செல்லும் பிற மாநிலத்தவர்களின் கவனத்திற்கு!

Posted by - April 18, 2021

நாட்டின் பல்வேறு மாநிலங்களைப் பேலவே கேரளாவிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்படுத்த தேவையான பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு புறம் கொரோனா பரிசோதனையைக் கேரள அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் பல புதிய கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு கொரோனா உறுதியானால்

Read More

கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி!

Posted by - April 8, 2021

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையிலும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 6ஆம் தேதி கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில

Read More

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

Posted by - April 6, 2021

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. பலத்த பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இறுதியாக மாலை 6 மணிக்கு மேல் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடை அணிந்து வந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இரவு 7

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)