கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று பாதிப்பு!

Posted by - April 17, 2021

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது மனிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இருப்பினும், இரண்டு நாட்களாக அவருக்குத் தொடர் காய்ச்சல் இருந்தது. இதன் காரணமாக அவர் பெங்களூரு ராமையா நினைவு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் கொரோனா காரணமாக மீண்டும்

Read More

அதிகரிக்கும் கொரோனா – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்!

Posted by - April 3, 2021

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டு விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது, அதன் விவரத்தை இப்போது பார்ப்போம் : ◆6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது ◆10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இயங்கும், ஆனால் மாணவகள் காட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.விருப்பம் இருந்தால் வரலாம். ◆கல்லூரி மாணவர்களும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வுகள் மட்டும் நடைபெறும். ◆உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்டி

Read More

மாநில உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு – பொங்கி எழுந்த கர்நாடக பாஜக அமைச்சர்!

Posted by - March 29, 2021

மைசூரில் நடைபெற்ற ‘தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்’ என்ற தலைப்பிலான அகில பாரத ஷரனா சாகித்ய பரிஷத் கருத்தரங்கில் மாதுசாமி பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறை ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று அவர் கூறினார். மாதுசாமி கூறியதை பாருங்கள் : மருத்துவ கல்விக்கு நீட் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா மற்றும் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும்

Read More

பெங்களூரு செல்கிறீர்களா? ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஆவணம் கட்டாயம்!

Posted by - March 26, 2021

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள நிலையில் கொரோனா 2ம் அலையை வரவிடாமல் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச் 25) புதிதாக 2523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கும் மேலான பாதிப்பை பெங்களூரு சந்தித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1623 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனிடையே பெங்களூருவில் கொரோனா

Read More

கொரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டது – கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை !

Posted by - March 22, 2021

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 1,715 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு, தட்சிணா கன்னட, கலாபுராகி, பிதர், மைசூரு ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை கர்நாடகாவில் 9,68,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் கே சுதாகர், கர்நாடகாவில் கொரோனா பரவலின் இரண்டாவது

Read More

அரசு பணி கேட்டு நாடிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வசமாக சிக்கிய கர்நாடக பா.ஜ.க அமைச்சர் !

Posted by - March 3, 2021

சில வருஷத்துக்கு முன்பு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் சிசிபாட்டீல், கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி ஆகியோர் ஆபாச வீடியோ பார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. தேசிய அளவில் அது எதிரொலித்தது. அந்த சம்பந்தப்பட்ட 3 பேருமே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களில் லட்சுமண் சவதி துணை முதல்வராகவும், சி.சி.பட்டீல் அமைச்சராகவும் பதவியில் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இதற்கு பிறகு கடந்த மாதம் கர்நாடக சட்ட மேலவை கூட்ட தொடர் நடந்து கொண்டிருந்தபோது, அவையில்

Read More

ராமர் கோவிலுக்கு நிதி கேட்டு வீடு புகுந்து மிரட்டினர் – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பகீர் !

Posted by - February 17, 2021

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு தனது வீட்டுக்கு நேரடியாக வந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், நாடு முழுக்க வலதுசாரி இயக்கத்தை சேர்ந்தவர்கள் ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு சென்று பணம் கேட்கத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி சில தினங்களுக்கு முன்பாக

Read More

கர்நாடகா : பலமாதமாக சம்பளம் வழங்காத ஐபோன் தயாரிக்கும் ஆலையை சூறையாடிய ஊழியர்கள் !

Posted by - December 12, 2020

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 3,000 ஊழியர்கள் இந்த செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நேற்று இரவு பணிக்கு வந்த 2000 ஊழியர்கள் பணி முடிந்த இன்று காலை ஊதியம் வழங்க கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து

Read More

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு !

Posted by - October 23, 2020

கர்நாடகாவில், நவம்பர் 17ம் தேதி முதல் அனைத்து வகையான கல்லூரிகளையும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்கள், வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாகவும் படிக்க முடியும். கல்லூரி வர வேண்டுமா, வீட்டிலிருந்து படிக்க வேண்டுமா என்பதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை கல்லூரி வந்து படிக்க விரும்பினால், அவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும்

Read More

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் பருவமழை.. காவிரியில் 1,50,000 கனஅடி நீர் திறப்பு !

Posted by - August 8, 2020

தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கர்நாடகாவில் உள்ள பெல்காம், பீஜப்பூர், பாகல்கோட், தார்வாட், கதக் போன்ற மாவட்டங்களிலும், மங்களூர், உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா போன்ற கடலோர மாவட்டங்களிலும், ஹாசன், குடகு, சிக்மங்களூர், ஷிமோகா போன்ற மலைநாடு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. இம்மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக் காடுகளாகக் காட்சியளிப்பதோடு மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)