அதிரையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

Posted by - August 12, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர். அதிராம்பட்டினத்தில் நேற்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், பேரூர் திமுக அலுவலகமான அண்ணா படிப்பகத்தில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் மற்றும் பேரூர்

Read More

அதிரையில் எம்எல்ஏ அண்ணாதுரை தலைமையில் மின்துறை கலந்தாய்வுக் கூட்டம்!(முழு விவரம்)

Posted by - August 12, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை தலைமையில் மின்துறை சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று அதிரையில் நிலவி வரும் மின்துறை சார்ந்த குறைகளை எம்எல்ஏ கா. அண்ணாதுரையிடம் கோரிக்கையாக முன்வைத்தனர். அதன்படி அதிரையில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை போக்க, 110KV துணை மின் நிலையப்பணிகள் ஒரு வருடத்தில் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும்

Read More

அதிரை அருட்கவி தாஹா மறைவு -MLA கா. அண்ணாதுரை இரங்கல்!

Posted by - June 27, 2021

அதிரை அருட்கவிஞர் தாஹா அவர்களின் மறைவுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினத்தின் மூத்தவர் மரியாதைக்குரிய முகமது தாஹா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்து மிகுந்த துயறுற்றேன். நான் சார்ந்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழமை கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை கிளையில் நிர்வாகியாகவும், திமுக மீது பற்றுதல், இஸ்லாமிய நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல் என இவரின் சமூக பணிகள்

Read More

அதிரையில் 2ம் கட்ட நிவாரணத் தொகை மற்றும் மளிகை தொகுப்பு திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

Posted by - June 15, 2021

கொரோனா தொற்றின் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த மே மாதம் முதற்கட்டமாக ரூ.2000 அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் தவணை ரூ.2000 நிவாரணம், இம்மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் அதனுடன் சேர்த்து

Read More

‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!

Posted by - June 6, 2021

மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள், பயணிகள் என பலதரப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்ட வருகின்றது. இந்நிலையில் மதுக்கூர் தமுமுக சார்பில் ‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ என்ற நோக்கத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் முகாம் இன்று மதுக்கூர்

Read More

மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாராட்டு!(படங்கள்)

Posted by - May 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 30/05/2021 மாலை 3.30 மணி அளவில் மதுக்கூரில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவு மையத்திற்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமுமுகவினரின் கொரோனா கால சேவைகளை பாராட்டினார். மேலும் கொரோனா தொற்றால்

Read More

அதிரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு!(முழு விவரம்)

Posted by - May 30, 2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்பிடி இன்று மாலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

Read More

அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ எச்சரிக்கை!

Posted by - May 23, 2021

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இதனால் காய்கறி, சந்தை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்கிறார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காய்கனி வியாபாரிகள், கொள்ளை இலாபம் ஈட்டும் நோக்கில் அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது

Read More

கோரிக்கை வைத்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! ஆம்புலன்சை வழங்கிய அதிரை!!

Posted by - May 17, 2021

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாமரங்கோட்டையில் கொரோனா தொற்றாளர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை அறிந்த சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அவசர காலத்தை கருத்தில் கொண்டு அதிரை நகர தமுமுக ஆம்புலன்சை தாமரங்கோட்டை மக்களின் சேவைக்காக வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், கா.அண்ணாதுரை முன்னிலையில் தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்களது ஆம்புலன்சை சேவைக்காக அனுப்பிவைத்தனர்.இந்த நிகழ்வின்போது அதிரை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

Read More

சொன்னதை செய்த பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ! முழுநேர மக்கள் பணியை துவங்குகிறார்!!

Posted by - May 15, 2021

தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மு.கருணாநிதியால் திமுக ஆட்சிகாலத்தில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெருவில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திப்பேன் என கா.அண்ணாதுரை உறுதியளித்திருந்தார். மேலும் தனது பணியினை முழுமையாக இவ்வலுவலகத்தில் இருந்து செய்வேன் எனவும் கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் நோக்கத்தில் 17.05.2021 ( திங்கள்கிழமை ) முதல் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தனது பணியை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை துவங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அவரை பொதுமக்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)