கும்பமேளா : சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி – ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர். ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனிதமான நாட்களில் ஹரித்வார் கங்கை