உ.பியில் சிக்கிய பெற்றோர் : குழந்தையின் இதய சிகிச்சையை இலவசமாகச் செய்த கேரள அரசு !
கேரளாவில் 3 வயது குழந்தை ஒன்றின் இதய அறுவை சிகிச்சை குழந்தையின் பெற்றோர் இல்லாமலே வெற்றிகரமாக நடந்து உள்ளது. இந்த சிகிச்சை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கேரளாவின் மருத்துவ துறை, இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும் ஒரு மருத்துவ துறையாக மாறியுள்ளது. அதிலும் கொரோனா சமயத்தில் கேரளாவின் சுகாதாரத்துறை தனது உண்மையான திறமையை உலகிற்கு காட்டியது. அதோடு அங்கு வரிசையாக பலருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை, இதய சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதய மாற்று