கொரோனா விவரத்தை ஏன் மறைக்கிறீர்கள் ? – குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்!
கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குஜராத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 97 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 9,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி