ஒருபுறம் பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம்.. மறுபுறம் தொடரும் போராட்டம்.. மாஸ் காட்டும் விவசாயிகள் !
ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்ய விவசாய தலைவர்கள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகரிலும் போராட்டம் 112ஆவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தலைநகரை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இது தொடர்பாக