பயங்கரவாதிகள் என்று விவசாயிகளை சொல்பவர்கள் மனிதர்களே கிடையாது – பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி !
“நமக்காக உணவு வழங்கும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்வதா? விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும்சரி, அவர்கள் மனிதர் என்றே அழைக்கப்பட தகுதியற்றவர்கள்” என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அம்மாநில பாஜக தலைவர் தேவேந்திரபட்னாவிஸ் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த போராட்டம் 18 நாட்களை கடந்து தீவிரமாகி வருகிறது. மற்றொரு பக்கம், இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு