மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை !

Posted by - May 29, 2020

4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வல்லரசு நாடுகளை விட, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரிழப்புகள் குறைவு என்பதால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர், மருத்துவர்களின் அயராத பணியால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். 

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)