தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்த வேண்டும் – ஹைகோர்ட் கடும் கண்டனம்!
மே 2-ம் தேதியன்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியையும் உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், 77 வேட்பாளர்கள் போட்டியிடும் கரூர் தொகுதியில் வாக்கு