விவசாயிகளுக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த பஞ்சாப் டிஐஜி !

Posted by - December 13, 2020

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். நான் முதலில் ஒரு விவசாயி, பின்னர்தான் போலீஸ் அதிகாரி என பதவியை ராஜினாமா செய்த டிஐஜி பெருமையுடன் தெரிவித்து உள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் ஆதரவு குரல் பெருகி வருகிறது. மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தலைநகர்

Read More

கடும் குளிரிலும் 16வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம் – இதுவரை 7 விவசாயிகள் உயிரிழப்பு !

Posted by - December 11, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 15 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனால், பிரதமர் மோடி விவசாயிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

Read More

நாளை பாரத் பந்த் – தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு !

Posted by - December 7, 2020

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாளை நடைபெறும் நாடு தழுவிய பாரத் பந்த்- முழு அடைப்புக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக தவிர அனைத்து எதிர்க் கட்சிகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

Read More

டிச 8ம் தேதி ‘பாரத் பந்த்’ உறுதி – கிஷான் சங்கம் அறிவிப்பு !

Posted by - December 5, 2020

மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)