வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நாளை உருவாகிறது ஆம்பன் புயல் !
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதிகரித்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை