அதிரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவிகள் – மாஸ்க், சானிடைசர் கொடுத்து வரவேற்பு!

Posted by - September 2, 2021

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். அதன்படி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பள்ளிகள் 9,10,11,12ம் வகுப்புகளின் மாணவ, மாணவிகளுக்காக நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த மாணவிகளுக்கு அதிரை

Read More

அதிரையில் கொரோனா தடுப்பூசி முகாம்: வெளிநாடு செல்வோர் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு!!

Posted by - June 21, 2021

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் மட்டுமே அயலகம் செல்ல இயலும் என்ற நிலை தற்போது உருவாகி உள்ளது. இதனால் அமீரகம் செல்ல அந்நாட்டு அரசு இரண்டு தவனை தடுப்பூசி செலுத்திய யாவரும் உரிய ஆவனத்துடன் நுழைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தினமும் மற்ற ஊர்களில் நடக்கும் முகாம்களுக்கு அதிரையர்கள் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நிலை இருந்து வந்தன. இந்த நிலையில் நாளை(22-06-2021) அன்று காலை 10மணி முதல் ஊசி இருப்பு இருக்கும் வரை அதிராம்பட்டினம் சாரா

Read More

கொரோனாவால் இறந்த கோவில் பூசாரியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!

Posted by - June 19, 2021

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி பெரியசாமி, கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என பூசாரியின் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் மதுக்கூர் தமுமுகவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஃபவாஸ், தவ்ஃபிக், தமிழ், பாசித் ஆகியோர் அடங்கிய மதுக்கூர் தமுமுகவின் நல்லடக்க குழு, கோவில் பூசாரி

Read More

கொரோனா தடுப்பூசிக்கு 5% GST தொடரும் – ஒன்றிய நிதியமைச்சர் அறிவிப்பு!

Posted by - June 12, 2021

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மருத்துவ உபகரணங்கள் மீதான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தினர். பின்னர், கடந்த மே 28ம் தேதி 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து

Read More

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னென்ன ?

Posted by - June 12, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில மாவட்டங்களில் பாதிப்பு அதே நிலையில்தான் உள்ளது. அதனால், பாதிப்பு குறையாத மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தும், பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்தும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என மருத்துவர்கள் குழு பரிந்துரை வழங்கியது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய

Read More

தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள்.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு ? எதற்கெல்லாம் அனுமதி ? முழு விவரம்!

Posted by - June 7, 2021

தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று கொரோனா காரணமாக 434 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில்

Read More

மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால பணிகள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாராட்டு!(படங்கள்)

Posted by - May 31, 2021

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 30/05/2021 மாலை 3.30 மணி அளவில் மதுக்கூரில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவு மையத்திற்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ், தமுமுகவினரின் கொரோனா கால சேவைகளை பாராட்டினார். மேலும் கொரோனா தொற்றால்

Read More

நாட்டிலேயே முதல்முறை – பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

Posted by - May 30, 2021

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்தார். கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் எப்படி நடக்கின்றன, லாக்டவுன் கட்டுப்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று நேரடியாக ஆய்வு செய்தார். அதன் ஒரு கட்டமாக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நோயாளிகளை

Read More

கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் – அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட TNTJ வினர்!

Posted by - May 26, 2021

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். இவர் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் துரை. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(24/05/2021) மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் TNTJ தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படி TNTJ முன் களப்பணியாளர்களால் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப்

Read More

கொரோனா சிகிச்சைக்காக நிதி வழங்கிய தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம்!

Posted by - May 25, 2021

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப ஆக்ஸிஜன் வழங்கபட்டு வருகிறது. அங்கு இருப்பில் இருக்கும் ஆக்ஸிஜனின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து திமுக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், கொரோனா சிகிச்சைக்கு நிதியாக ரூ.1,25,000க்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுகொண்ட கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி இந்த நிதியை கொரோனா மையத்தின் மேம்பாடு, உயிர்வலி ஆகியவைகளுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)